வெடிகுண்டு மிரட்டல் : அவசரமாகத் திருப்பி விடப்பட்ட ஐரோப்பிய விமானம்
ஐரோப்பாவில் விமானங்களைக் குறிவைத்து விடுக்கப்படும் தொடர் அச்சுறுத்தல்களின் விளைவாக, டப்ளினிலிருந்து ரோம் நோக்கிச் சென்ற ஏர்பஸ் ஏ320 விமானம் பிரான்சின் எவ்ரே விமானத் தளத்திற்குத் திருப்பி விடப்பட்டதாக பிரெஞ்சு பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரதமரின் அலுவலகம் நிலைமையைக் கண்காணித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.
வெடிகுண்டு சாதனங்கள்
விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் வலைத்தளமான Flightradar24- இன் படி , ஏர் லிங்கஸ் விமானம் ஒன்று, வானில் அவசரநிலையை அறிவித்த பிறகு, பாரிஸ் அருகே திரும்பி எவ்ரே பகுதிக்கு மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

ஐரோப்பாவில் செவ்வாய்க்கிழமை அன்று குறைந்தது ஏழு விமானங்களுக்கும் ஒரு உல்லாசக் கப்பலுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால் விமான நிலையங்களில் இடையூறு ஏற்பட்டது.
இருப்பினும் எந்த வெடிகுண்டு சாதனங்களும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எண் கணிதம் கூறும் ரகசியம்: 35 வயதிற்குப் பிறகு இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ராஜவாழ்க்கை! Manithan
ரூ. 4000 கோடி பட்ஜெட் ராமாயணா படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்... கணிக்கப்பட்ட விவரம் Cineulagam