கனடா - அமெரிக்காவிற்கிடையில் மதில் சுவர் எழுப்ப வேண்டும்: விவேக் ராமசாமி வலியுறுத்து
சட்டவிரோத ஆட்கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத போதை பொருள் கடத்தல்கள் போன்றவற்றை தடுக்கும் நோக்கில் அமெரிக்க குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான விவேக் ராமசாமி தீர்வொன்றினை முன்வைத்துள்ளார்.
அந்த வகையில், கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் மதில் சுவர் எழுப்பப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மியாமியில் நடைபெற்ற வேட்பாளர் தெரிவு விவாதமொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக சில வேட்பாளர்கள் கட்சிக்குள் போட்டியிட்டு வருகின்றனர். அவ்வாறான வேட்பாளர்களில் ஒருவராக விவேக் ராமசாமி காணப்படுகின்றார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், “இவ்வாறு மதில் சுவர் உருவாக்கப்பட வேண்டும். தமது கட்சியின் எல்லை பாதுகாப்பு கொள்கை போதுமானதல்ல.” என தெரிவித்துள்ளார்.