கூரிய ஆயுதத்தால் அடித்துகொலை செய்யப்பட்ட மனைவி: கணவன் எடுத்த விபரீத முடிவு
மிஹிந்தலை பகுதியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் அடித்து கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (07) மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சிக்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது.
மிஹிந்தலை, குஞ்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஆணும் 56 வயதுடைய பெண்ணும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மிஹிந்தலை பொலிஸார் விசாரணை
கணவன், மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கடந்த 06 ஆம் திகதி இரவு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் கணவரே மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடாரி, குற்றம் நடந்த இடத்தில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உருகி உருகி மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பிய மெசேஜ்... வெளிச்சம் போட்டு காட்டிய ஜாய் கிறிஸ்டில்லா Manithan