மெக்சிகோ வளைகுடாவை தனதாக்கிய அமெரிக்கா!
மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடாவாக பெயரிடும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
ட்ரம்ப் தனது அதிகாரப்பூர்வ விமானம் அமெரிக்க வளைகுடாவின் மீது பறந்தபோது இதில் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் நடைபெறவுள்ள கால்பந்து தொடரை பார்க்க புளோரிடாவிலிருந்து நியூ ஆர்லியன்ஸுக்கு, உத்தியோகப்பூர்வ விமானத்தில் பயணித்தபோதே நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
மெக்சிகோ வளைகுடா
டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோ வளைகுடாவின் பெயரை மாற்றப் போவதாக சமீபத்தில் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, தற்போது அதற்கான உத்தரவில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்க நிறைவேற்று ஆணை 14172-ன் ஒரு பகுதியான ‘அமெரிக்காவின் பெருமையை மதிக்கும் பெயர்களை மீட்டெடுத்தல்‘ என்ற தலைப்பில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த உத்தரவில், மெக்சிகோ வளைகுடா என முன்னர் அறிவிக்கப்பட்ட பகுதி நீண்ட காலமாக வளர்ந்து வரும் நமது தேசத்தின் ஒருங்கிணைந்த சொத்தாக இருந்து, அமெரிக்காவின் அழியாக பகுதியாக இருந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)