ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பு! கனவிலும் நினைக்காத விடயங்கள் இனி சாத்தியம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சந்திப்பின் மூலம் நாம் கனவிலும் நினைக்காத விடயங்கள் சாத்தியப்பட வாய்ப்புள்ளதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
சமீபத்திய அமெரிக்க விஜயத்திற்குப் பிறகு நேற்றையதினம்(09.02.2025) தனது அமைச்சரவை உறுப்பினர்களிடம் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் மூலம் சில மாதங்களுக்கு முன் சாத்தியமில்லாமல் இருந்த விடயங்கள் கூட சாத்தியப்பட வாய்ப்பிருப்பதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு பல வாய்ப்புக்கள்
ஹமாஸை அகற்றுவது, பணயக்கைதிகள் பரிமாற்றம் மற்றும் 'இஸ்ரேலுக்கு இனிமேல் காசாவால் அச்சுறுத்தல் இல்லை' போன்ற விடயங்களை ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு கலந்துரையாடியதாக கூறப்படுகின்றது.
ட்ரம்ப்பின் மாறுபட்ட சிந்தனை இஸ்ரேலுக்கு சாதகமாக இருப்பதாகவும் நெதன்யாகு சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ட்ரம்ப்பினால் இஸ்ரேலுக்கு பல வாய்ப்புக்கள் திறக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
