கமெனியுடன் மிக நெருக்கமான பதவி! ஈரானுக்கு பேரதிர்ச்சியாகும் செய்தி - யார் இந்த அலி லாரிஜானி..!
ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் (SNSC) செயலாளரான அலி லாரிஜானி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்படை அறிவித்துள்ளது.
ஈரானிய அரசாங்கத்தில் மிக முக்கிய பதவி வகித்த இவர் படுகொலை செய்யப்பட்டிருந்தால், உண்மையில் ஈரானுக்கு அது ஒரு பெரிய இழப்பு தான் என தெரிவிக்கப்படுகின்றது.
2025 ஒகஸ்ட் மாதத்தில் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியானால், SNSC செயலாளராகவும், மறைந்த உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியின் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டார்.
படுகொலை செய்யப்பட்டதாக IDF விடுத்த அறிவிப்பு.. சற்றுமுன்னர் அலி லாரிஜானியின் எக்ஸ் தளத்தில் வெளியான பதிவு!
ஈரானுக்கு மிகப்பெரிய இழப்பு
ஈரானிய ஊடகங்களில் அவர் உயர்மட்ட தலைவர் அலி கமேனியின் ஆலோசகராகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அவர், 2008ஆம் ஆண்டு மே முதல் 2020 மே வரை, 12 ஆண்டுகள் ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகராக பதவி வகித்துள்ளார்.
2008-2012 வரை நாடாளுமன்றத்தில் பிரின்சிபலிஸ்ட் (தீவிர போக்காளர்) குழுவின் தலைவராக இருந்தாலும், சமீப காலங்களில் "மிதவாத கன்சர்வேட்டிவ்" என விவரிக்கப்படுகிறார்.
இந்நிலையில், அலி கமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, லாரிஜானியை ஈரானிய ஆட்சியின் தலைவர் என இஸ்ரேலிய இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.
முக்கிய அதிகாரிகள்..
எனவே, ஈரானிற்கு தலைடை தாங்கிய அடுத்த முக்கிய அதிகாரியையும் இஸ்ரேல் கொன்று விட்டதாக கூறும் வகையில் இது அமைந்துள்ளது.

அந்தவகையில், அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டு நடவடிக்கையில், அலி கமெனிக்கு அடுத்த இலக்காக லாரிஜானி சுட்டிக்காட்டப்பட்டுள்ளார்.
அதேநேரம், ஈரானின் பல முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளை முன்னதாகவே படுகொலை செய்து விட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
குறிப்பாக, தாக்குதல்களில் பாதுகாப்பு ஆலோசகர் அலி ஷம்கானி, பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசிர்சாதே, புரட்சிகர காவல் படை தளபதி ஜெனரல் முகம்மது பக்பூர் மற்றும் ஆயுதப்படைகள் தலைமை அதிகாரி அப்துல்ரஹீம் மூசவி ஆகியோரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.