திடீரென பதவி விலகிய அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் தலைவர்
அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் தலைவர் ஜோ கேன்ட், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான நடைபெற்று வரும் போரை தாம் ஆதரிக்க முடியாது என்பதாலேயே இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம், அமெரிக்க செனட் சபை, டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்தவராக ஜோ கேன்டை இந்த பதவிக்கு உறுதிப்படுத்தியது.
தனது பதவி விலகல் கடிதத்தில் ட்ரம்பை நோக்கி அவர் கூறியதாவது, “ஈரான் எங்கள் நாட்டிற்கு உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை.
ஈரானுக்கு எதிரான போர்
இப்போர் இஸ்ரேல் மற்றும் அதன் அமெரிக்க ஆதரவாளர்களின் அழுத்தத்தால் தொடங்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

2016, 2020, 2024 தேர்தல்களில் நீங்கள் முன்வைத்த வெளிநாட்டு கொள்கைகளையும் மதிப்புக்களையும் நான் ஆதரிக்கிறேன்.
2025 ஜூன் மாதம் வரை, மத்திய கிழக்கு போர்கள் அமெரிக்காவின் உயிர்களையும் செல்வத்தையும் வீணாக்கும் சதியாகும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருந்தீர்கள்.
11 முறை போரில் பங்கேற்ற ஒரு முன்னாள் இராணுவ வீரராகவும், இஸ்ரேல் உருவாக்கியதாக நான் நம்பும் ஒரு போரில் என் மனைவி ஷானனை இழந்த கணவராகவும், அமெரிக்க மக்களுக்கு எந்த நன்மையும் அளிக்காத இந்த போரில் அடுத்த தலைமுறையை அனுப்பி அவர்களின் உயிர்களை இழக்கச் செய்வதை நான் ஆதரிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.