ஈரானின் சரமாரியான பதிலடி! கொத்தாக அழிக்கப்பட்ட ஏவுகணைகள்
மத்தியக் கிழக்கில் மூண்டுள்ள போர் ஏழாவது நாளாக நீடிக்கும் நிலையில், ஈரானின் 78 ஏவுகணைகள் மற்றும் 143 ட்ரோன்களை தாம் அழித்துள்ளதாக பஹ்ரைன் அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
பஹ்ரைனின் அறிவிப்பு
இந்த நிலையில், குறித்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் வளைகுடா நாடுகள் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் சரமாரியான ஏவுகணைத் தாக்குதல் மற்றும் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.

குறித்த வளைகுடா நாடுகளில் பஹ்ரைனும் உள்ளடங்கும் நிலையில், தங்கள் நாட்டின் மீது ஈரான் நடத்தும் தாக்குதல் துரோகச் செயல் என்று பஹ்ரைன் அறிவித்துள்ளது.
மேலும், தங்களது நாட்டின் மீது ஈரான் செலுத்திய 78 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தாம் அழித்துள்ளதாக பஹ்ரைனின் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.