பசில் ராஜபக்சவிற்கு மீண்டும் பிடியாணை உத்தரவு! பிணையாளர்களுக்கும் கடும் எச்சரிக்கை
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவு இன்று (21) மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதையடுத்து மீண்டும் பிடியாணை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கைதினை தடுக்க வெளிநாட்டிலிருந்து பசில் எடுத்த அவசர முடிவு ! மீண்டும் பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு
வழக்கு விசாரணை
மேலும், முன்னாள் அமைச்சரின் நான்கு பிணையாளர்களுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள தலைமை நீதவான், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

மாத்தறை பிரதான நீதிபதி சத்துர திசாநாயக்க முன்னிலையில் இன்று (21) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
கட்டுவான தீ விபத்தில் 5 பேர் பலி..! பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்: தீயை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனம்
you may like this video