சக்திவாய்ந்த வான்வழி தாக்குதல்! ஈரானின் முக்கிய இராணுவ மையம் செயலிழந்துள்ளதாக அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்களில் ஈரானில் உள்ள பெரிய இராணுவ அகாடமியும் குறிவைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மணிநேரங்களில் ஈரானில் உள்ள பல மூலோபாய இடங்களில் நடந்த இந்த தாக்குதல்கள் இராணுவ பயிற்சி மையங்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏவுகணை மற்றும் குண்டுவெடிப்பு
ஈரானிய தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதுகாப்பு மையங்கள் ஏவுகணை மற்றும் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன.

ஈரானிய இராணுவத்தின் மூத்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் இராணுவ அகாடமி மீதான தாக்குதல், நாட்டின் பாதுகாப்பு எந்திரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் விமானப்படை சக்தி இப்போது கிட்டத்தட்ட முற்றிலுமாக செயலிழந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளமை கறிப்பிடத்தக்கது.