இலங்கை கடற்பரப்பில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! மாயமான பலர்: தொடரும் மீட்பு பணிகள்
இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அருகில் அமெரிக்காவினால் தாக்கி அழிக்கப்பட்ட ஈரானிய கப்பலின் எச்சங்களை தொடர்ந்து தேடி வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அதன்படி, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக பல கப்பல்கள் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
அவசர சமிக்ஞை
இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அருகே ஈரானின் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற ஈரானின் போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி அழிக்கப்பட்டது.

இந்தநிலையில், தாக்குதலுக்கு இலக்கான கப்பல் தொடர்பில் கிடைத்த அவசர சமிக்ஞையைத் தொடர்ந்து இலங்கை கடற்படையினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்த தாக்குதலில் 87 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
தொடரும் மீட்பு பணிகள்
மேலும் 87 பேரின் உடல்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் காலி தேசிய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து மீட்கப்பட்ட 80இற்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் பலரைக் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரானிய கப்பலின் எச்சங்களை தொடர்ந்து தேடி வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கடலில் மூழ்கி மாயமான எஞ்சிய 61 பேரின் நிலை என்ன? அவர்களும் கடலில் மூழ்கி உயிரிழந்துவிட்டனரா? என்பது குறித்து அவர்களை தேடும் பணியையும் கடற்படையினர் துரிதப்படுத்தியுள்ளனர்.