ஈரான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
ஈரான் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த அந்நாட்டு கடற்படை வீரர்களின் சடலங்களை தலைநகர் தெஹ்ரானுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரானிய அராசங்கத்தினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கடற்படை கப்பல் அண்மையில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு இலக்காகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நபர்கள்
ஈரான் கப்பலில் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த 84 பேரின் சடலங்கள் தொடர்பான நீதவான் விசாரணை நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் காலி துறைமுக பொலிசார் காலி நீதவான் நீதிமன்றிற்கு தகவல்களை வழங்கியிருந்தனர்.

இந்த தகவல்களை தொடர்ந்து காலி பிரதான நீதவான் சமீர தொடங்கொட மற்றும் காலி மேலதிக நீதவான் மகேஷிகா விஜயதுங்க ஆகியோர் குறித்த சடலங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
ஈரான் கப்பலில் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நபர்களின் சடலங்களை நடமாடும் குளிருட்டிகளில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.