ஏவுகணை வீச்சுக்களுக்கு மத்தியில் ஈரானில் சிக்கியுள்ள 600 தமிழர்கள்! களத்தில் இருந்து அபாயக் குரல்..
மத்தியக் கிழக்கில் எல்லையற்று நீண்டு வரும் போர் உலகெங்கிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கம் செலுத்தி வருகின்றது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டாக ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அங்கிருக்கக் கூடிய உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மக்கள் கடும் அச்சத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர்.
இந்தநிலையில், சுமார் 600 இந்தியத் தமிழர்கள் ஈரானில் சிக்கியிருப்பதாகவும், அவர்கள் கடற்றொழில் மேற்கொள்ளும் நிமித்தம் அங்கு தங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், தாக்குதல் நடத்தப்படும் இடங்களுக்கு மிக அருகிலேயே அவர்கள் இருப்பதாகவும், எந்த நேரத்திலும் ஏவுகணை வீச்சுக்களில் சிக்குண்டு தங்களுடைய உயிர் பறிபோகுமோ என்ற அச்சத்தில் அவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், தங்களுடைய தற்போதைய நிலையை ஐபிசியின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியின் ஊடாக அங்கிருக்கும் இந்தியத் தமிழர்கள் வெளிக்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் விரிவான தகவல்களை வழங்குகின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,