சிறைச்சாலை மோதலுக்கு அநுர அரசாங்கமே முழுக்காரணம் : எழும் விமர்சனம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற நடவடிக்கைகளே நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதலுக்கான காரணமாக அமைந்திருப்பதாக சர்வஜன பலய கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர விமர்சித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்வையிடச் சென்றபோது அவர் மேற்கண்டவாறான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
பதவியிலிருந்து தன்னிச்சையாக நீக்கப்பட்டது
மோதலில் உயிரிழந்த அதிகாரிகள் மற்றும் கைதிகள் சார்பாகத் தனது இரங்கலைத் தெரிவித்த அவர், குறுகிய அரசியல் நோக்கங்கள் கைவிடப்பட்டு, இச்சம்பவம் குறித்து முறையான கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் குறித்து இன்று (07) நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை விரிவாகத் தெரிவிக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தனது பதவியிலிருந்து தன்னிச்சையாக நீக்கப்பட்டதும் இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீர்கொழும்பு சிறை மோதல்: கைதிகளால் அடித்து நொருக்கப்பட்ட CCTV கமராக்கள் - தீவிரமடையும் சிஐடி விசாரணை