ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதியின் நெருங்கிய சகா இரகசிய சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசாங்கத்தின் முக்கிய செயற்திட்டமான க்ளீன் ஸ்ரீலங்கா பணிப்பாளரும், ஜனாதிபதியின் நெருங்கிய ஆலோசகருமான கிரிசாந்த குரேயும் இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 4ஆம் திகதி மாலை, ப்ளவர் வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பு சிறை மோதல்: கைதிகளால் அடித்து நொருக்கப்பட்ட CCTV கமராக்கள் - தீவிரமடையும் சிஐடி விசாரணை
ஒரு மணி நேரம் நீடித்த சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஒப்புதலுடன் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என கூறப்படுகின்றது.
இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையே ஒரு உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காகவே இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமாரவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி அநுர குமாரவின் ஆலோசனை மற்றும் வேண்டுகோளின் பேரிலேயே இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிடுகின்றன.