சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என அந்த கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் ஏகமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் முகாமையாளர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடியில் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என முன்னாள் ஜனாதிபதி கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களிடம் கேட்டுள்ளதுடன் அப்போது சுதந்திரக் கட்சி உடனடியாக அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என தொகுதி அமைப்பாளர்களும் முகாமையாளர்களும் தெரிவித்துள்ளனர்.
எனினும் இது அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கான பொருத்தமான காலமல்ல என மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளதுடன் அவசியமான நேரத்தில் அரசாங்கத்தில் இருந்து சுதந்திரக் கட்சி விலகும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை நாளைய தினம் பிற்பகல் 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 29 நிமிடங்கள் முன்
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri