சிறுமியை கொடூரமாக தாக்கிய தந்தை: காணொளி வெளியிட்டவருக்கு பணப்பரிசு
முல்லைத்தீவு – மணலாறு (வெலிஓயா) பகுதியிலுள்ள வீடொன்றில் தந்தை ஒருவர் சிறுமியை கொடூரமாக தாக்கும் காணொளியை பதிவு செய்த இளைஞன் இன்று பொலிஸாரினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த இளைஞருக்கு இன்று (12) பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 5 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
தருஷ சந்தருவன் கொடிகார என்ற இளைஞரே இவ்வாறு பாராட்டப்பட்டுள்ளார்.
விளக்கமறியல் உத்தரவு
இந்த காணொளியின் வாயிலாக குகுல் சமிந்த என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும்19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபர்களை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதவிய நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த தாக்குதலினால் பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு பொறுப்பில் உள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
