எதிர்த்தரப்பை நடுநடுங்க வைக்கும் அநுர அரசு...
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தற்போது இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வது பொருத்தமற்றது என சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தநிலையில் நீதி அமைச்சர் மற்றும் சில அமைச்சர்கள் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, இந்த கால நீடிப்பு குறித்த விளக்கங்களை அளித்து ஆசி பெற்றுள்ளனர். இது அரசாங்கம் இந்த விடயத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஓய்வு வயது நீடிப்பு என்பது அரசாங்கத்திற்குச் சாதகமான ஒரு நகர்வு என்றும், இது தொடர்பான விவாதங்கள் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த செயல்பாட்டின் விளைவாக உருவெடுத்துள்ளதாகவும் அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், சட்டத்துறை சார்ந்து அரசியலமைப்பில் செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் அவற்றின் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கங்கள் குறித்த அச்சமே இந்த சர்ச்சையின் மையப்புள்ளியாக உள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
ஜனாதிபதி - 6 தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பில் திட்டவட்டமான தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை..!