வெளிநாட்டில் கணவர் - கர்ப்பிணி பெண்ணின் விபரீத முடிவு
கேகாலையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கிணற்றில் குதித்தமையினால் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரம்புக்கன, பத்தம்பிட்டிய பகுதியை சேர்ந்த சதாசிவம் ஸ்ரீகுமாரி என்ற 28 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொள்ள முயன்றுள்ளார்.
குறித்த பெண் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இல்லாமையினால் உறவினர்கள் அவரை தேட ஆரம்பித்துள்ளனர். இதன் போது அந்த பெண் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து கிடந்ததனை அவதானித்துள்ளனர்.
பின்னர் அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவரது மூத்த சகோதர தெரிவித்துள்ளார். வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதன் பின்னர் வயிற்றில் இருந்த குழந்தை கிணற்றிலேயே பிறந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் குழந்தையை தேட நடவடிக்கை எடுக்கப்பட்ட போது குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்யும் ஒருவர் என தெரியவந்துள்ளது. நேற்று மாலை 3 மணியளவில் குழந்தையின் சடலம் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் மரணம் தொடர்பிலும் தாய் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்தமை தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
