இலங்கைக்கு கொடுத்த பரிசை மீண்டும் எடுத்துக்கொள்ளும் தாய்லாந்து: தயாராகும் கூண்டு
இருபது வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட யானையை,
மீண்டும் தமது நாட்டுக்கு வரவழைக்க தாய்லாந்து அரசாங்கம் நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளது.
தாய்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சர் வரவுட் சில்பா-ஆர்ச்சா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த யானை நோய்வாய்ப்பட்டு மோசமான வாழ்க்கை நிலைமைகளைக் கொண்டிருப்பதால் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக எதிர்வரும் ஜூன் மாதம் தாய்லாந்துக்கு அழைத்துச்செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்லாந்து குழுவின் பரிந்துரை
"சாக் சுரின்" என்ற இந்த யானையை, தாய்லாந்திற்கு அழைத்து வருவதற்கான தயார்நிலையை மதிப்பிடுவதற்காக, கால்நடை மருத்துவர்கள் குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக்குழு வழங்கிய பரிந்துரைக்கு அமைய, யானையை நாட்டுக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக தாய்லாந்தின் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் யானையை விமானத்தில் அழைத்துச்செல்வதற்கான பொருத்தமான கூண்டு தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உரிய முறையில் கவனிப்பின்மை
வருடாந்த பௌத்த அணிவகுப்புகளின் போது புனித நினைவுச்சின்னங்களை எடுத்துச் செல்வதற்காக இந்த யானை, இலங்கை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
இருப்பினும் இலங்கையில் இந்த யானை உரியமுறையில் பராமரிக்கப்படவில்லை என்று
இலங்கையின் விலங்கு பாதுகாப்பு அமைப்பு ஒன்று தெரிவித்த முறைப்பாட்டை அடுத்தே,
தாய்லாந்து அரசாங்கத்தினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
