திமுகவின் கோட்டையை தகர்த்த தவெக : 76 ஆண்டுகள் வரலாற்றுச் சாதனை முறியடிப்பு..!(LIVE)
புதிய இணைப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக இரு பிரதான திராவிட கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் அவரைப் பின்னுக்குத் தள்ளி தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு முன்னிலை வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பலரும் தத்தமது தொகுதிகளில் பின்தங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில், 76 ஆண்டுகள் வரலாறு கொண்ட திமுகவையும் 54 ஆண்டுகள் பழமையான அதிமுகவையும் பின்னுக்குத் தள்ளி மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவே வயதான ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 1.09 கோடி வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026,ல் இரண்டாம் இடத்தில் 71.97 லட்சம் வாக்குகளுடன் திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது.
2021ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற திமுக 2.09 கோடி வாக்குகளைப் பெற்றிருந்தது. அதிமுக கூட்டணி ஒட்டுமொத்தமாக 1.83 கோடி வாக்குகளைப் பெற்றிருந்தது.
வரலாற்றில் முக்கிய நிகழ்வாக புதிய கட்சியான தவெக இதுவரை 1.09 கோடி வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிகளின் ஒட்டுமொத்த வாங்கு வங்கியில் சரிபாதியை தற்போது தவெக பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
பிற்பகல் 12 மணி நிலவரப்படி
வாக்கு எண்ணிக்கையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 80 லட்சம் வாக்குகளை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 12 மணி நிலவரப்படி தமிழக வெற்றி கழகம் 112 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 70 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 52 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளில் இதுவரை 1.5 கோடி வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. 50 லட்சம் வாக்குகளை தவெக பெற்றுள்ளது.
மேலும், அவர் ஒரே நாளில் திமுக கோட்டையை உடைத்து அரசியல் களத்தையே மாற்றியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூன்றாம் இணைப்பு
காலை 11.30 நிலவரப்படி. தொடர்ந்து தவெக ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
தமிழக வெற்றிக் கழகம் 109 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 50 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 75 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
தபால் மூல வாக்குகளின் படி தமிழக வெற்றிக் கழகம் 100 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 81 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 50 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 9:50 நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 90 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 66 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
இரண்டாம் இணைப்பு
முதலில் தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிவை பெற்று வருகின்றது.
அதன்படி காலை 9:20 நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 73 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 50 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 54 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
முதலாம் இணைப்பு
தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் இன்று(04.05.2026) தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.
காலை 8 மணிக்கு அதிகாரிகள் தபால் வாக்குகளை எண்ணும் பணியை தொடங்குவார்கள் என கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணும் பணி தொடங்கும்.
தொடர்ந்து மாலை 5 மணியளவில் இந்திய தேர்தல் ஆணையம் யார் வெற்றியாளர் என்ற அதிகார பூர்வ அறிவிப்புகளை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை ஜபிசி தமிழில் உடனுக்குடன் நேரலையில் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026