அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! பெரும்பாலான அமைச்சர்கள் பெரும் பின்னடைவு
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 23 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இன்று (திங்கட் கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதை முடிவு செய்யும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன.
4 முனைப்போட்டி
திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவிய நிலையில், பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் எண்ணப்படுகின்றன.

இதற்காக 234 வாக்கு எண்ணும் அறைகள் மற்றும் 3,300-க்கும் மேற்பட்ட மேஜைகள் இயங்கிவருகின்றது. இந்த தேர்தல் இறுதி முடிவுகள் பல அதிரடித்திருப்பங்களுடன் வெளியாகவுள்ள நிலையில் அரசியல் விமர்சகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச மக்களிடமும் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, சென்னையில் 16 இடங்களில் தவெக முன்னிலை வகித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட 31 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளதுடன், தேர்தல் முடிவுகள் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார்.