சூடுபிடிக்கும் நிலவரம் - தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு முன் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்
சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் வீட்டின் முன் குவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.
வாக்கு எண்ணும் பணி
இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் அளித்த தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன.
தற்போது EVM இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

இந்த ஆரம்பக் கட்ட எண்ணிக்கை முடிவுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
தபால் வாக்குகள் எண்ணிக்கையின் ஆரம்ப நிலவரப்படி, திமுக தலைமையிலான கூட்டணி 51 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 60 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri