தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் : தவெக தொடர்பில் தேர்தல் ஆணையகம் வெளியிட்ட அறிவிப்பு
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 35வீத வாக்குகளை கடந்துள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23ஆம் திகதி ஒரே கட்டமாகத் வாக்குப்பதிவு நடைபெற்றது.
திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவிய நிலையில், பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.
எண்ணப்பட்ட வாக்குகளில் தவெக
234 தொகுதிகளின் முன்னிலை நிலவரத்தில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை.
தமிழக வெற்றிக் கழகம் 102, அதிமுக 74, திமுக 57 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.

தவெக இடத்தில் முன்னிலையில் இருந்தாலும் முன்னிலை நிலவரத்தில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை. ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில் இதுவரை யாருக்கும் பெரும்பான்மை இல்லை.
அதேபோல் தேர்தல் ஆணையகத்தின் அறிவிப்பின்படி தற்போது வரை எண்ணப்பட்ட வாக்குகளில் தவெக 35வீதம், திமுக 24.23வீதம், அதிமுக 23.77வீதம் வாக்கு பெற்றுள்ளன.
மேலும், சட்டமன்றத் தேர்தலில் தவெக முன்னிலை பெற்று வரும் நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.