பங்களாதேஷிற்கு ஏற்பட்ட ஆபத்து இலங்கையை பாதிக்குமா..!
பொருளாதாரம் உட்பட எல்லா துறைகளிலும் கடந்த 15 ஆண்டுகளாக ஓரளவு முன்னேறிக் கொண்டிருந்த பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைகுலைவானது உலகின் பல்வேறு கோணங்களில் இருந்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
பங்களாதேஷில் கடந்த சில வாரங்களாக மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது.
இதற்கிடையில், மாணவர்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவி சாய்க்காத நிலையில் இலங்கையின் அரகலய போராட்டத்தினை போல அந்நாட்டு பிரதமரின் வீட்டுக்குள் நுழைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தமது நிலைப்பாட்டை அவர்கள் முன்னிறுத்தினர்.
இதன் விளைவாக, அந்நாட்டின் நீண்டகால பிரதமர் ஆக இருந்த சேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டே தப்பியோடினார்.
கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ள நாட்டு மக்களையும் கைவிடப்பட்ட நிலையில் அரசாங்கத்தையும் பங்களாதேஷின் இராணுவம் காபந்து அரசு என்னும் பெயரில் தற்போது பொறுப்பேற்று நிற்கின்றது.
இந்நிலையில், உலகின் அனைத்து பக்கங்களில் இருந்தும் பங்களாதேஷை நோக்கி வீசப்படும் கேள்வி பார்வைகளுக்கு தெளிவூட்டும் வகையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் வழங்கும் கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய நாளுக்கான ஊடறுப்பு நிகழ்ச்சி....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
