தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - மகிந்த கட்சி வேட்பாளரின் முடிவு
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தென்னிலங்கை அரசியல் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்த வர்த்தகர் தம்மிக பெரேரா ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களிற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் அவர் போட்டியிடவுள்ளதாக பல்வேறு தரப்பினராலும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலில் நாமல் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வேட்பாளராக களமிறங்கும் நாமல் ராஜபக்ஷவின் போட்டோஷூட் புகைப்படங்களை அவரின் ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ளது.







புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 10 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
