ரணில் எடுத்த கடுமையான முடிவுகளின் விளைவு
2022ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையான தீர்மானங்களை எடுத்தார். அதன் விளைவாகத் தான் நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத்.சி.தொலவத்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றயதினம் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் போராட்டம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஆசிய வலய நாடுகளில் அரசியல் நிலை அவதான நிலையில் காணப்படுகிறது.2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் நிலை தற்போது பங்களாதேஷ் நாட்டில் காணப்படுகிறது. போராட்டங்களுக்கு மத்தியில் பங்களாதேஸ் நாட்டின் பிரதமர் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
எமது அரசாங்கத்தின் ஒருசில தவறான தீர்மானங்களினால் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் போராட்டங்கள் தோற்றம் பெற்றன. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக வழியில் போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.
மக்கள் போராட்டத்தை ஒரு அரசியல் கட்சி தமது அரசியலுக்காக பயன்படுத்தி பாசிஸ கொள்கையுடன் மக்களை தூண்டி விட்டது. அரகலயவின் போது நாட்டில் சட்டவாட்சி மலினப்படுத்தப்பட்டது. இவ்வாறான பின்னணியில் தான் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
போராட்டகாரர்கள் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றியிருந்தால் பங்களாதேஸ் நாட்டின் நிலை தான் இங்கும் தோற்றம் பெற்றிருக்கும்.
நாட்டின் சட்டவாட்சியை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 ஆம் ஆண்டு கடுமையான தீர்மானங்களை எடுத்தார். அவ்வாறு செயற்பட்டதால் தான் நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
தற்போதைய முன்னேற்றத்தை சீர்குலைப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி தொழிற்சங்க போராட்டங்களை தூண்டி விடுகிறது.
மக்களாணையுடன் ஆட்சிக்கு வர முடியாதவர்கள் ஜனநாயகம் என்று குறிப்பிட்டுக் கொண்டு பாசிஸவாத கொள்கையுடன் செயற்படுகிறார்கள். பங்களாதேஸ் நாட்டின் நிலைமையை அனைவரும் ஒரு படிப்பினையாக கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
