அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அரசியலில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.
நோய்வாய்ப்பட்டுள்ள காரணத்தினால் தலைமைப் பொறுப்பிலிருந்து இருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கட்சியின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பிரேமரத்ன நியமிக்கப்படடுள்ளார்.
எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என இதற்கு முன்னர் அவர் அறிவித்திருந்தார்.
வாசுதேவ நாணயக்கார
தற்போது 85 வயதை கடந்துள்ள வாசுதேவ நாணயக்கார, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்துள்ளார்.
ஜனவரி 3, 1939 இல் தென் மாகாணத்தில் உள்ள உடலமட்ட கிராமத்தில் பிறந்த வாசுதேவின் தந்தை பிரான்சிஸ் நாணயக்கார ஒரு வர்த்தகராவார்.
இவரது தாயார் ஐரீன் எலிசபெத் விஜேசேகர திஸாநாயக்க.
நான்கு சகோதரர்களும் நான்கு சகோதரிகளும் கொண்ட வாசுதேவ நாணயக்காரவின் குடும்பத்தில், திரைப்பட தயாரிப்பாளர் யசபாலித நாணயக்கார மற்றும் அரசியல் பிரமுகர் ஹேமகுமார் நாணயக்கார ஆகியோர் அவரின் சகோதரர்களாவர்.
காலி ரிச்மண்ட் கல்லூரியில் கல்வி பயின்ற இவர், இலங்கை சட்டக் கல்லூரியில் தகுதிபெற்று, சட்டப் பயிற்சியாளராகப் பணியாற்றியவராவார்.
நாணயக்கார 1958 இல் இலங்கை சமசமாஜக் கட்சியில் (LSSP) முதலில் இணைந்தார். 1970 நாடாளுமன்றத் தேர்தலில் சமசமாஜக் கட்சிக்காக கிரியெல்ல தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட அவர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜனாதிபதி தேர்தல்
நாணயக்கார பின்னர் சம சமாஜக் கட்சியை விட்டு வெளியேறி 1977 இல் புதிய சமசமாஜக் கட்சியை (NSSP) உருவாக்கினார். ஆனால் 1977 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார்.
1982ல் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட அவர், .17,005 (0.26%) வாக்குகளை மாத்திரம் பெற்று ஐந்தாவது இடத்தை பெற்றுக்கொண்டார்.
இந்நிலையளில், 1983 ஜூலை கலவரத்திற்குப் பிறகு இலங்கை அரசாங்கம் புதிய சமசமாஜக் கட்சி, ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (CP) ஆகியவற்றைத் தடை செய்தது.
இதன்பின்னர் நாணயக்கார, கருணாரத்ன, ரோஹண விஜேவீர உள்ளிட்ட இடதுசாரி அரசியல்வாதிகள் 1985 தடை நீக்கப்படும் வரை தலைமறைவாகவே காணப்பட்டனர்.
அதன் பின்னர், 1987 இல், , புதிய சமசமாஜக் கட்சி, உள்ளிட்ட சில கட்சிகள் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியுடன் இணைந்து ஐக்கிய சோசலிசக் கூட்டணியை உருவாக்கியது.
இந்நிலையில், 1989ல் இடம்பெற்ற பொது தேர்தலில் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு நுளைந்தார் வாசுதேவ நாணயக்கார.
1994 நாடாளுமன்றத் தேர்தலுக்காக, நாணயக்கார நவசமசமாஜக் கட்சியை விட்டு வெளியேறி மக்கள் முன்னணியின் (PA) கூட்டணியான லங்கா சமசமாஜ கட்சியில் மீண்டும் இணைந்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தின் நாடாளுமன்ற வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட அவர் பின்னர் முன்னாள் ஜனாதிபதித் சந்திரிகா பனண்டாரநாயக்க அரசில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கட்சியை விட்டு வெளியேறி 1999 ஜனாதிபதித் தேர்தலிலும் ஒரு வேட்பாளராக போட்டியிட்டார்.
உள்நாட்டு போர்
இதனை தொடர்ந்து 2006 மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் மேயர் வேட்பாளராகப் நாணயக்கார போட்டியிட்டார். இதில் பெரும்பான்மை இழந்த நாணயக்கார தரப்பு சபையில் எதிர்க்கட்சியாகியது. தலைவரானார்.
இதன் பின்னர் இடம்பெற்ற 2010 நாடாளுமன்றத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்திற்கான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட நாணயக்கார 2010 நாடாளுமன்றத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்திற்கான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பியாக தெரிவு செய்யப்பட்டார்.
பின்னர் மகிந்த ராஜபக்ச ஆதரவு முகாமை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
2020 இல் நீர் வழங்கல் அமைச்சராக நியமிக்கப்பட்டார், ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் எதிர்க்கட்சிக்கு சென்றார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற காரசாரமான விவாதத்தின் போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வாசுதேவ கடுமையான வார்த்தைகளால் வசைபாடியமை பேசுபொருளான விடயமாகும்.
இலங்கையின் உள்நாட்டு போரின் போது போர் பகுதிகளில் வாழும் மக்கள் அதனுள் சிக்குண்டு இறத்தல் அபாய நிலைக்கு உற்படல் இடம் பெறலாம். ஆனால் பொது மக்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப் படும் இலங்கையில் நடக்கும் போர் மிருகத்தனமான மிலேட்ச செயலாகவே தாம் பார்ப்பதாகவும் இப்போரை உன்னிப்பாக நோக்குமிடத்து ஒரு சமுகத்தினரை அழித்தொழிக்கும் இனவழிப்பு நடவடிக்கை (genocide) என்றும் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
அரச பொய் பரப்புரைகளை எதிர்த்தல் இலங்கை அரச ஊடகங்கள் வெளியிடும் பொய் பரப்புரைகளை அப்பப்போது சுட்டிக் காட்டி அரசாங்கத்தை சவாலுக்குட்படுத்தியிருந்தார்.
புறக்கோட்டை குண்டு வெடிப்பு
கொழும்பு புறக்கோட்டையில் இடம்பெற்ற ஒரு குண்டு வெடிப்பு நிகழ்வு தொடர்பாக இலங்கை அரச ஆதரவு ஊடகங்கள் தமிழீழ வீடுதலைப் புலிகளே இந்த குண்டு வெடிப்பை நடத்தினர் என்ற பரப்புரைகளை மறுத்து அதற்கான காரணிகளையும் விளக்கி இருந்தார்.
ஊடகச் சுதந்திரம் தொடர்பில் ஆயுத பலத்தை பயன்படுத்தி ஊடகவியலாளர்களை அடக்குமுறைகளுக்கு உட்படுத்துவோர் பொதுமக்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், தமிழ் சட்டத்தரணிகள் தொடர்பில்
தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களின் சார்பில் வாதிட முன்வரும் தமிழ் சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களை தேசத்துரோகிகள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கும் செய்தியை நீக்க வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்த தலைவராவார்.
இவ்வாறான அரசியல் பின்னணியை கொண்ட வாசுதேவ நாணயக்கார தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |