ஜனாதிபதி தேர்தலால் ஐஎம்எப் உடன்படிக்கையில் மாற்றம் ஏற்படுமா..
சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது நடைமுறையில் உள்ள கடன் ஒப்பந்தம் தேர்தல் அல்லது ஏனைய விடயங்களைப் பொருட்படுத்தாது 2027 ஆம் ஆண்டு வரை அதே வழியில் செயற்படும் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன(Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இன்னும் சில மாதங்களில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் இருந்தாலும் சரி, யார் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் சரி, கடன் ஒப்பந்தத்தில் மாற்றம் ஏற்பட்டால், 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை உருவாக்க முடியாது.
வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற, தற்போதுள்ள நிதி அமைச்சர் மற்றும் நிதி அமைச்சும் சர்வதேச நாணய நிதியத்தில் கையொப்பமிட்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய, 2025ஆம் ஆண்டளவில் 5018 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு வள இடைவெளி இருக்கும் என்று மதிபீடு செய்யப்பட்டுள்ளதுடன், அதில் 663 மில்லியன் நிதியை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது..
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களும், உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வழங்குவதாக உறுதியளித்துள்ளதுள்ளதுடன், எமக்கு 3855 மில்லியன் நிவாரணம் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
