ட்ரம்பின் அதிரடி மாற்றங்கள்! இரத்து செய்யப்பட்ட தமிழ் மாணவியின் வீசா
அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைகழகத்தில் “நகர்ப்புற திட்டமிடல் துறை ஆராய்ச்சி“ என்ற உயர் பட்டப்படிப்பை கற்றுவந்த தமிழ் மாணவியின் வீசா இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் சர்வதேச தரப்புக்கள் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளன.
இந்தியாவின் தமிழ் நாட்டை சேர்ந்த ரஞ்சனி சீனிவாசன் என்ற மாணவியின் வீசாவே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது கொலம்பியா பல்கலைகழகம் மாணவர்கள் போராட்டத்திற்கு முக்கிய மையமாக இருந்தது.
ரஞ்சனி சீனிவாசன்
இந்திய மாணவி ரஞ்சனி சீனிவாசன் ஹமாசுக்கு ஆதரவான போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார்.
ஹமாஸ் அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து இதன்போது அமெரிக்காவில் சட்ட விரோத குடியேறிகளை ட்ரம்ப் நிர்வாகம் அதிரடியாக நாடு கடத்தி வருகிறது.
ரஞ்சனி சீனிவாசனின் விசாவை கடந்த 5ஆம் திகதி அமெரிக்கா இரத்து செய்துள்ளது.
விசா இரத்து செய்யப்பட்டதையடுத்து ரஞ்சனி சீனிவாசன் அமெரிக்காவில் இருந்து வெளியேற முடிவு செய்திருந்தார்.
அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு
இந்நிலையில் அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பின் மூலம் விண்ணப்பித்து அந்த நாட்டில் இருந்து தாமாக வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டி நோயம் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில்,’
“அமெரிக்காவில் கல்வி வாய்ப்பு கிடைப்பது ஒரு பாக்கியம். ஆனால் நீங்கள் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும்போது அந்த சலுகை இரத்து செய்யப்பட வேண்டும்.
அவ்வாறானவர்கள் இந்த நாட்டில் இருக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் விமான நிலையத்திற்குள் ரஞ்சனி சீனிவாசன் நுழையும் காணொளியை கிறிஸ்டி நோயம் பகிர்ந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
