புத்தாண்டு கால கொள்வனவுகள் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கடைகளில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கும் போது மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த பண்டிகைக் காலத்தில் சட்டத்தை மீறி அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது முறைப்பாடு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்புகளுக்கு...
அதன்படி, சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்களின் தொலைபேசி எண்களை www.phi.lk என்ற வலைத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும்அல்லது 0112 635675 என்ற தொலைபேசி எண்ணுக்கு புகார்களை தெரிவிக்கலாம் என்றும் உபுல் ரோஹண கூறியுள்ளார்.
இதற்கிடையில், எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியாக விசேட சோதனைகள் மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அந்தவகையில், விதி மீறல்களைச் செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், சோதனைகள் மற்றும் விசாரணைகளுக்காக சிறப்பு குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், காலாவதியான மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பொருட்கள் சந்தைக்குள் வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பல்பொருள் அங்காடிகள், சில்லறை விற்பனை கடைகள், விற்பனை மற்றும் மொபைல் வணிக நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
