அமெரிக்காவில் வீட்டின் மீது மோதிய விமானம்..! பற்றி எரிந்த வீடு - ஒருவர் பலி
அமெரிக்காவின் மினியாபோலிஸ் (Minnesota) புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விமானம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது, ஏற்பட்ட தீவித்தில் வீடு முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ள நிலையில் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேறி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சோட்டா புறநகர் பகுதியான புரூக்ளின் பார்க்கில் நேற்று இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ பரவல்
ஒரு சிறிய, ஒற்றை எஞ்சின் SOCATA TBM7 ரக விமானம் குடியிருப்பு வீட்டின் மீது மோதி நொறுங்கியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
#BREAKING: A Socata TBM-700 (N721MB) has crashed into a house in Brooklyn Park, Minnesota, while approaching Anoka-Blaine Airport. The aircraft was en route from Des Moines. The house was empty at the time, and no injuries have been reported inside. Authorities are investigating. pic.twitter.com/y1pA2C4Lin
— Turbine Traveller (@Turbinetraveler) March 29, 2025
அயோவாவில் உள்ள டெஸ் மொயின்ஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், அனோகா கவுண்டி - பிளெய்ன் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளது.
எதிர்பாராத விதமாக, குடியிருப்பு வீட்டின் மீது மோதியதால், பெரும் தீ விபத்து ஏற்பட்டு வீடு முற்றிலும் நாசமாகியுள்ளது.
இந்த கோர விபத்து சுமார் 82,000 மக்கள் வசிக்கும் புரூக்ளின் பார்க்கில் நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த இடம், நகரத்திலிருந்து சுமார் 11 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை
இந்நிலையில், விமானத்தில் பயணம் செய்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆரம்பகட்ட தகவலின்படி, விமானத்தில் பயணம் செய்தவர்களில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் வீட்டின் குடியிருப்பாளர்கள் காயமின்றி தப்பியதாக புரூக்ளின் பார்க் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விமான விபத்து குறித்து பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை (NTSB) அதிகாரிகள் விபத்துக்கான காரணத்தை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
