கனடாவில் கோலாகலமாக ஆரம்பமாகும் தமிழர் தெருவிழா
கனடாவில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக தமிழர் தெருவிழா எனும் நிகழ்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டும் இந்த நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.
இந்த மாதம் எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் இந்த நிகழ்வு கோலாகலகமாக நடைபெற உள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டொரன்டோ மார்க்கம் வீதியில் இம்முறை இந்த தமிழர் தெருவிழா நடைபெற உள்ளது. தமிழ் மக்களின் பாரம்பரிய, கலாச்சார, கலை அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.
இசை, தமிழ் பாரம்பரிய உணவு வகைகள் தமிழர் மரபுகள் என்பனவற்றை பறைசாற்றக்கூடிய வகையில் இந்த தமிழர் திருவிழா கனடாவில் நடைபெற உள்ளது.
இம்முறை நிகழ்வில் பிரபல தென்னிந்திய பாடகர் விஜய் பிரகாஷ் மாதுளாணி பெனார்டோ, பறை இசைக் கலைஞர் மணிமாறன் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் பிரபலங்களின் பங்கேற்பு
மேலும் மிகப்பெரிய பேரணி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்வியலாளர்கள் வரலாற்றியாலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றுவதோடு உள்ளூர் மற்றும் சர்வதேச தமிழ் பிரபலங்கள் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த தமிழர் தெருவிழா கனடிய வாழ் தமிழ் சமூகத்தின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.