வெளியில் இருந்து அழைத்துவரப்படும் சிங்களவர்கள் - சிறைக்குள் நிகழ்த்தப்படும் சித்திரவதைகள்!
சிறைகூடத்திற்குள் வெளியிலிருந்து சிங்களவர்கள் அழைத்து வரப்பட்டு தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்துள்ள பதிவுகளும் உள்ளன என்று குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன் தெரிவித்தார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஆனால் இதற்குரிய விசாரணைகளோ நியாயங்களோ இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை. தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரன் விடயத்தில் தற்போது ஆயுள்கைதியாக சிறையில் இருக்கின்றார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிகாலத்தில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன, ஆனால் அதுவும் கைவிடப்பட்ட நிலையிலே உள்ளது.
இது தொடர்பான முழுமையான விடயங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க....



