அமெரிக்காவில் புலம்பெயர் குடும்பமொன்றிற்கு நேர்ந்த கதி
அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் வலென்சியா பினா என்பவர், தனது வீட்டை தீக்கிரையாக்கி, தன்னை, தனது மனைவி ஜைமார் பிராவோ கில் (33), மகள் யோர்ஜினா (14) மற்றும் மகன் ஜூலியனோவைக் (9) கொன்ற துயரான சம்பவம் நடந்துள்ளது.
தீ விபத்தை கண்டு சிலர் உடனடியாக மீட்பு முயற்சிகளில் ஈடுபட்டனர்.
தீவைத்த தந்தை
தீக்கிரையான வீடு 6 லட்சம் டொலர் மதிப்பிலானது என தெரியவந்துள்ளது.தீயில் கருகி பரிதவித்த யோர்ஜினா என்ற 14வயது பெண் தனது உடல் முழுவதும் எரிந்து விட்ட நிலையிலும் உயிருடன் இருந்துள்ளார்.
மீட்புபணிக்காக சென்ற போது தமக்கு ஒக்சிஜன் தேவை என்று கூறியுள்ளார். யோர்ஜினாவை உலகுவானூர்தியில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் உயிரிழந்துள்ளார்.
இறக்குமுன், தீவைத்தது தனது தந்தை தான் என அவர் பொலிஸாரிடம் கூறியதாகத் தெரியவந்துள்ளது.அந்த குடும்பத்தின் வளர்ப்பு நாய் மட்டும் மீட்கபட்டுள்ளது.
[GFBJBKN[
அமெரிக்காவில் தஞ்சம்
இந்த குடும்பம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெனிசுவேலாவிலிருந்து வந்து அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
வீட்டை தீக்கிரையாக்கியவரின் மனைவியான ஜைமார் பிராவோ கில் அவரது கணவரால் நீண்டகாலமாக துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் ஆவணங்கள் இல்லாதவர்கள் என்பதனால் பொலிஸில் புகார் செய்ய முடியவில்லை என தெரியவந்துள்ளது.





அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
