தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள அவசர கடிதம்

Sri Lanka Politician Sri Lanka Sri Lankan Peoples President of Sri lanka
By Ashik Aug 03, 2022 03:28 PM GMT
Report

வலிமையான ஜனநாயக கட்டமைப்பை உருவாக்கி இன ஐக்கியத்தை ஏற்படுத்த உளப்பூர்வமாக செயலாற்றுவார்கள் என மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றோம் என்று  தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நேற்று (2) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,“மூன்று தசாப்தமாக நீங்கள் கண்ட பெருங்கனவு நிறைவேறியுள்ளது, ஆகவே இலக்கை எட்டுவதற்கு அதிகாரம் கிடைத்துள்ளதால் இலகுவாக இருக்கும் என நம்புகிறோம்.

பொருளாதாரக் கட்டமைப்பு கொள்கை

மேலும், முதலில் பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்தி சாமானியனின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழிவமைக்க வேண்டும். அதுவே இன்றைய அத்தியாவசிய அடிப்படை தேவையாகும்.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள அவசர கடிதம் | Tamil National Right To Life Movement Urgen

குறிப்பிட்ட காலத்துக்குள் உலக ஒழுங்கு நடப்பியலுக்கமைய பொருளாதார நிலையை சீர்படுத்துவீர்கள் என பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

ஏற்றுமதி செய்யக்கூடிய உள்நாட்டு உற்பத்தியை அதிகம் ஊக்குவியுங்கள்,போர்க்கால அடிப்படையில் அதனால்தான் அந்நிய செலவாணியை ஈட்ட முடியும். எனவே கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை உயர் நிலைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்ற முறைமையை உருவாக்கவில்லை.

தூய அரசியலை மேற்கொள்ளாமல் சாக்கடை அரசியலை மேற்கொண்டு நாடு அழிவுப் பாதையில் நடத்தி செல்லப்பட்டுள்ளது.

இதன் காரணம் பல்லினத்தன்மை அற்ற பௌத்த தேசியவாத போக்கை முதன்மைப்படுத்தியதன் விளைவே இந்த நிலைமைக்கு அடிப்படைக் காரணமாகும்.

ஆகவே பௌத்த தேசியவாதமும், யுத்த வெற்றிவாதமும், இராணுவ மேட்டிமைத்தனமும் தோற்றுவிட்டது என்பதை இனியாவது உணருங்கள், சிங்கள கடும் போக்காளர்களுக்கு உணர்த்துங்கள், புத்தரின் தம்மபதக் கோட்பாட்டை இனியாவது நடைமுறைப்படுத்த முனையுங்கள்.

நாட்டுக்கு நாடு கடன் பெற்று இலங்கை பொருளாதாரத்தை நிலை நிறுத்த முடியாது என்பதை இதுவரை உணர்ந்ததாக தெரியவில்லை, இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது வெறும் பகட்டு பகல் கனவு, அது உதட்டளவுடன் உரு மறைந்து போகும் என்பதை தாங்கள் உணராதவர் அல்ல, ஆகவே இடைக்கால தீர்வையாவது முன்வையுங்கள்.

தமிழ் தலைமைகள்

இவற்றில் புலம்பெயர்ந்த இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் பெரும் பங்காற்றுபவர்கள், தமிழ் மக்களுக்கு ஜனநாயக உரிமை வழங்க வேண்டும், என்பதிலும் அதிகார பகிர்வு மூலமே இன முரண்பாட்டிற்கு முற்றுப்புள்ளி இட முடியும் என பல சந்தர்ப்பங்களில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் தமிழ்த் தலமைகளுக்கும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள அவசர கடிதம் | Tamil National Right To Life Movement Urgen

2002 உடன்படிக்கை இதற்கு சிறந்த உதாரணமாகும் வரலாறு தங்களுக்கு பெரும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

அதை சரியாக பயன்படுத்தி வரலாறாக வாழ்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம், எனவே இந்த நாட்டிற்கு அரச ஊழியர்கள் சுமையாக இருக்கிறார்கள். வினைத்திறன் அற்றவர்கள் பட்டதாரியானால் அரச நியமனம் வழங்க வேண்டும் என்பது மிகத் தவறான கொள்கையாகும்.

தங்களின் 2003ம் ஆண்டு ஆட்சியில் கொண்டு வந்தது போன்று சிறப்பு ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வந்து அரச ஊழியர்களை அரைவாசியாக குறையுங்கள்.

யுத்தம் முடிவுற்று பதின்மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட முப்படையினர் எதற்கு? நாட்டின் பொருளாதார இழப்பில் பெரும் பங்கு இராணுவ செலவீனமாகும்.

நாடாளுமன்றம் உறுப்பினர் தெரிவு

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் இவர்களின் உச்சபட்ச வேதனத்தையும் சிறப்பு சலுகைகளையும் சாதாரண வாழ்க்கைக்கு ஏற்றது போன்று குறையுங்கள்.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள அவசர கடிதம் | Tamil National Right To Life Movement Urgen

நாடாளுமன்றம் கூடும் நேரகாலத்தை குறையுங்கள், அர்த்தமில்லாத பயனற்ற விவாதங்களே அதிகம் நடக்கின்றது.

இதன்படி, கால நீடிப்பு செய்யப்பட்ட அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் உடனடியாக களையுங்கள்.

மாதாந்தம் பாரிய செலவு ஏற்படுகிறது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை எந்தவித அரசியலும் இன்றி சுயாதீனமாக செயற்பட அனுமதியுங்கள் சாதாரணமாக அரசியலுக்கு வந்து கோடிஸ்வரராக மாறிய அனைத்து அரசியல்வாதிகளின் சொத்துக்களை அரசுடமையாக்குங்கள்.

ஒற்றையாட்சி முறை

வினைத்திறனின்றி இருக்கும் அரசாங்க அதிகாரிகளை உடனடியாக மாற்றுங்கள் ஓய்வு பெறும் வயதை அறுபதாக குறையுங்கள் இல்லாவிட்டால் அரச திணைக்களங்கள் முதியோர் இல்லங்களாக மாறிவிடும்.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள அவசர கடிதம் | Tamil National Right To Life Movement Urgen

இதற்கமைய நிலையாக நின்று நிலைக்கக் கூடிய ஒற்றையாட்சி அல்லாத புதிய அரசியல் அமைப்பை உருவாக்குங்கள் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விரைவாக விடுதலை செய்யுங்கள் அல்லது மாற்றுவழி தேடுங்கள்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு விரைந்து தீர்வு காணுங்கள் உண்மையை கண்டறிந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள், தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, கனியவளத் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக நில அதிகரிப்பை நிறுத்த வேண்டும்.

இதற்கமைய அபகரித்த நிலத்தை உடனடியாக விவசாய உற்பத்திக்காக விடுவிக்க வேண்டும், வடக்கு-கிழக்கில் பௌத்த விகாரைகள் அமைப்பதை நிறுத்த வேண்டும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும்.

மேலும் வடக்கு-கிழக்கில் உள்ள இராணுவம் குறைக்கப்பட வேண்டும், ஆகவே இணைந்து முன்நோக்கி நகர்தலுக்கு தங்களின் நல்லெண்ண செயற்பாடே இன ஐக்கியத்திற்கு வழிவகுக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US