யாருடைய ஆட்சிக்காலத்தில் நடந்தது..! ஐரோப்பியத் தூதுவர்களிடம் தமிழரசுக் கட்சி வலியுறுத்தல்

European Union Sri Lankan Tamils Sri Lankan Peoples Sri Lanka Government chemmani mass graves jaffna
By Rakesh Jul 22, 2026 07:22 AM GMT
Report

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி சம்பந்தமாகத் தனியாக ஓர் ஆய்வை நடத்தி, எந்தக் காலத்தில் மனிதர்கள் அங்குப் புதைக்கப்பட்டார்கள் என்பதைக் கண்டறிவதன் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காண முடியும் என ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஜெட்விங் விடுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்களுடான சந்திப்பு நேற்று(21.07.2026) சந்திப்பு இடம்பெற்ற பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கோர விபத்தில் இருவர் பலி - ஆபத்தான நிலையில் மூன்று மாணவர்கள்

கோர விபத்தில் இருவர் பலி - ஆபத்தான நிலையில் மூன்று மாணவர்கள்

யாருடைய ஆட்சிக்காலத்தில் புகைப்பட்டது?

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு தளத்தை ஐரோப்பியத் தூதுவர்கள் நேரில் பார்வையிட்டுள்ள நிலையில், இது குறித்துத் தனியான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தோம்.

யாருடைய ஆட்சிக்காலத்தில் நடந்தது..! ஐரோப்பியத் தூதுவர்களிடம் தமிழரசுக் கட்சி வலியுறுத்தல் | Tamil National Party To European Ambassadors

பாதிக்கப்பட்டவர்கள் எந்தக் காலத்தில் புதைக்கப்பட்டார்கள் என்பதைப் பார்ப்பதன் மூலம், அந்தக் காலப் பகுதியில் அதிகாரத்தில் இருந்தவர்கள் யார் என்பதை இனம் கண்டு, குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று சுட்டிக்காட்டினோம்.

பிரதிநிதிகளிடம் மீளாய்வு செய்ய கோரிக்கை

மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையிலேயே இலகுவாக நடத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரியுள்ளோம். மாகாண சபையில் தற்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லாததால் அரச அதிகாரிகளே நிர்வாகத்தைக் கவனித்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினோம்.

யாருடைய ஆட்சிக்காலத்தில் நடந்தது..! ஐரோப்பியத் தூதுவர்களிடம் தமிழரசுக் கட்சி வலியுறுத்தல் | Tamil National Party To European Ambassadors

புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதன் மூலமும், விவசாய மற்றும் மீன்பிடித்துறைகளை மேம்படுத்துவதன் மூலமும் பிராந்திய பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க முடியும் என்பதால், ஐரோப்பிய நாடுகள் இதற்கான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் கோரினோம்.

வட பகுதியில் நிலவும் திண்மக் கழிவு மற்றும் வடிகாலமைப்பு போன்ற பாரிய பிரச்சினைகளை நவீன முறையில் கையாள்வதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறும் ஐரோப்பியத் தூதுவர்களிடம் சுட்டிக்காட்டினோம் என்றார். 

நாட்டை உலுக்கிய ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்து - நேரில் கண்ட தொழிலாளியொருவர் வெளியிட்ட காரணம்

நாட்டை உலுக்கிய ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்து - நேரில் கண்ட தொழிலாளியொருவர் வெளியிட்ட காரணம்

இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்


3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US