ஆசியக் கிண்ணப் போருக்கு தயாராகும் இலங்கை ‘ஏ’ அணி! முதல் போட்டியில் பங்களாதேஷுடன் மோதல்
கட்டாரின் டோஹாவில் நடைபெறவுள்ள DP World ஆசியக் கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ் ஆண்கள் 2026 கிரிக்கெட் தொடரில், இலங்கை ‘ஏ’ அணி தனது முதல் போட்டியில் பங்களாதேஷ் ‘ஏ’ அணியை எதிர்கொள்ளவுள்ளது.
50 ஓவர்கள் கொண்ட இந்தத் தொடர் நவம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
எட்டு அணிகள்
இதில் மொத்தம் எட்டு அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டியிடுகின்றன.

குழு A: இலங்கை ‘ஏ’, பங்களாதேஷ் ‘ஏ’, ஆப்கானிஸ்தான் ‘ஏ’ மற்றும் ஹொங்கொங் (சீனா)
குழு B: இந்தியா ‘ஏ’, பாகிஸ்தான் ‘ஏ’, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்.
இலங்கை ‘ஏ’ அணி
இலங்கை ‘ஏ’ அணி தனது முதல் போட்டியில் நவம்பர் 19ஆம் திகதி பங்களாதேஷ் ‘ஏ’ அணியையும், இரண்டாவது போட்டியில் நவம்பர் 21ஆம் திகதி ஹொங்கொங் அணியையும் எதிர்கொள்ளவுள்ளது.
தொடர்ந்து, நவம்பர் 23ஆம் திகதி ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணியுடன் மோதவுள்ளது.

இத்தொடரின் போட்டிகள் டோஹாவில் அமைந்துள்ள வெஸ்ட் எண்ட் இன்டர்நேஷனல் கிரிக்கெட் அரங்கம் மற்றும் தோஹா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக மைதானம் ஆகியவற்றில் நடைபெறவுள்ளன.
தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், இறுதிப் போட்டி நவம்பர் 29ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இராணுவ அதிகாரியின் மகனையும் விட்டு வைக்காத கோட்டாபய! மகிந்தவும் மகனும் தப்பி ஓடிய இரகசிய தடுப்பு முகாம்..