பேசுபொருளாகும் விஜயின் புகைப்படம்.. தமிழ்நாட்டு அரசியலை புரட்டிப்போட்ட வரலாறு!
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சி மூலம் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், தற்போது இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் ஒரு பழைய புகைப்படம், இந்த வெற்றியை ஒரு தீர்க்கதரிசனம் போலச் சித்தரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டு பேசுபொருளாகியுள்ளது.
அந்தப் புகைப்படத்தில், தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்குப் பின்னால் மிகச் சாதாரணமான ஒரு சிறுவனாக தவெக தலைவர் விஜய் நின்று கொண்டிருக்கிறார்.
கலைஞருடன் புகைப்படம்..
இவ்வாறிருக்கையில், இன்று அதே சிறுவன், தமிழகத்தின் அரை நூற்றாண்டு கால திராவிட ஆட்சி முறைக்கு ஒரு பெரும் சவாலாக உருவெடுத்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார் என பேசப்படுகின்றது.

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட விஜய், திராவிடக் கட்சிகளின் கோட்டைகளைத் தகர்த்து 100இற்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
குறிப்பாக, தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது தொகுதியிலேயே பின்னடைவைச் சந்தித்துள்ள சூழலில், விஜயின் இந்த வெற்றி தமிழக அரசியலில் ஒரு புதிய யுகத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த புகைப்படம் தற்போது பேசுபொருளாகி வருகின்ற நிலையில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.