தமிழ் கனடியன் நடை பயணத்திற்கு கிடைத்த வெற்றி (PHOTOS)
இலங்கையில் உள்ள ஆறு வைத்தியசாலைகளுக்கு 60-70 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய அவசரகால மருந்துகளை வழங்கும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தமிழ் கனடியன் நடை பயணம் 2022 இன் இணைத் தலைவர் Dr. M. மயிலாசன் (Dr.M.Mylashan) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,கனடிய நடைபயணத்தின் போது கனேடிய தமிழர்களின் தாராளமான பங்களிப்பின் மூலம் நிதி திரட்டப்பட்டது.
இந்த முன்முயற்சியானது இலங்கையின் சுகாதார பாதுகாப்பில் ஆழமான மற்றும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதார பாதுகாப்பு
இதன்போது கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை என்பவற்றிற்கு தலா 12 மில்லியன் ரூபாய் பெறுமதியான அவசர மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை கல்முனை ஆதார வைத்தியசாலை மற்றும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு தலா 07 மில்லியன் ரூபாய் பெறுமதியான அவசர மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் தெல்லிப்பளை பாதை புற்றுநோய் வைத்தியசாலைக்கு 14 மில்லியன்ரூபாய் பெறுமதியான அவசர மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கனடிய தமிழ் சமூகத்திற்கு நன்றி
கனடிய தமிழ் சமூகம் இந்த பணிக்கு நிதியுதவி செய்வதில் அவர்களின் அசைக்க முடியாத ஆதரவிற்கும் பெருந்தன்மைக்கும் நன்றிகள்.
இந்த முயற்சிக்கு அனைத்து உதவிகளையும் வழங்கிய கனடியன் தமிழ் காங்கிரஸிக்கு நன்றிகள்.
இலங்கை சுகாதார அமைச்சு, பணிப்பாளர் நாயகம், சுகாதார நன்கொடைக்கான பணிப்பாளர், NMRA (தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம்), சுங்கம் திணைக்களம் மற்றும் DHL ஊழியர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துகொள்கிறோம்.
உங்களின் அசைக்க முடியாத ஒத்துழைப்பும், செயல்திறனும் இந்த பணியை மகத்தான வெற்றியடையச் செய்ததில் உறுதுணையாக இருந்தது.”என தெரிவித்துள்ளார்.