50 வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த சிரிய கிளர்ச்சியாளர்கள்
புதிய இணைப்பு
சிரியாவில் (Syria) ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் (Bashar al-Assad) 53 ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதுடன் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, சிரியர்கள் ஒரு அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உள்நாட்டு போர் வெடித்தது.
சிரியா ஜனாதிபதி பஷார் அல் அசாத் ஆட்சியை எதிர்த்து யாத் தஹ்ரி அல் ஹாம் என்ற கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் இராணுவத்துடன் மீண்டும் ஆயுதமேந்த தொடங்கினர்.
அரச கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள்
அசாத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்த கிளர்ச்சியாளர்கள் இன்று காலை, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் இற்குள் நுழைந்ததை பகிரங்கமாக அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அரச கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் முழுவதும் கிளர்ச்சியாளர்கள் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இதன் மூலம் அசாத் குடும்பத்தின் 53 ஆண்டுகால ஆட்சி சிரியாவில் முடிவுக்கு வந்தது.
கிளர்ச்சியாளர்கள் குழு டமாஸ்கஸை நுழைந்ததை அடுத்து பஷார் அல் அசாத் நாட்டை விட்டு விமானத்தில் தப்பியோடி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலாம் இணைப்பு
சிரியாவின் (Syria) தலைநகர் டமாஸ்கசை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால், நகரை சுற்றிலும் குவிக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் படை வீரர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறையிலிருந்து கைதிகள் விடுவிப்பு
இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் தலைநகரை கைப்பற்றியதால் சிரியா ஜனாதிபதி பஷார் அல்-அசாத் ( Bashar al-Assad ) டமாஸ்கசை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து தலைநகர் டமாஸ்கஸ் எல்லைப் பகுதியில் பஷார் அல்-அசாத்தின் தந்தையின் சிலையை கிளர்ச்சியாளர்கள் உடைத்துள்ளதோடு, டமாஸ்கசில் முக்கிய சிறையிலிருந்து கைதிகளை கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளனர்.
இது தொடர்பாக கிளர்ச்சியாளர்கள் அமைப்பின் மூத்த தளபதி ஹசன் அப்துல் கானி தனது ரெலிகிராம் பதிவில், "டமாஸ்கஸ் நகரத்தை பஷார் அல்-அசாத்திடமிருந்து விடுவித்ததாக நாங்கள் அறிவிக்கிறோம்.
ஜனாதிபதி தப்பிச் சென்ற விமானம் மாயம்
உலகம் முழுவதும் இடம்பெயர்ந்த மக்களே, சுதந்திர சிரியா உங்களுக்காக காத்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சிரியா நாட்டில் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் தப்பிச் சென்ற விமானம் மாயமாகி உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள், பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் சிரியா செல்வது என்பது ஏற்று கொள்ள முடியாதது என கூறி வரும் நிலையில் இந்த பதற்ற நிலை உருவாகி உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |