பிரித்தானியாவில் அகதிகளுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்டுள்ள முக்கிய திட்டம்
பிரித்தானியாவில் அகதிகளுக்கு ஆதரவாக கொண்டுவரப்படும் திட்டம் ஒன்றுக்கு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில அரசியல்வாதிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அகதிகளுக்கு ஆதரவாக பிரித்தானியா முன்வைத்துள்ள திட்டம் விடுதிகள் மற்றும் பிற முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளோருக்காக அமையப்பெற்றுள்ளது.
தங்களுக்கென தங்க ஒரு வீடு மற்றும் வேலையை கண்டுபிடிப்பதற்காக 28 நாட்கள் கால அவகாசம், வழங்கப்பட்டுவரும் நிலையில் அதனை தற்போது அந்நாட்டு அரசாங்கம் அதிகரித்துள்ளது.
கால அவகாசம்
இதன்படி குறித்த கால அவகாசத்தை 56 நாட்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் திட்டமிட்டுள்ளது.
முன்னதாக இந்த காலகட்டத்தை அதிகரிக்கவேண்டும் என அரசுக்கு பல்வேறு அமைப்புகள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்துவந்த நிலையில், தற்போது காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலநீடிப்பை ஒரு சோதனை முயற்சியாக, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |