சர்வதேச அரங்குக்கு திரும்பியுள்ள ட்ரம்ப்: வில்லியமுடன் விசேட சந்திப்பு
பிரான்ஸ் - பாரிஸில் நோட்ர டேம் தேவாலய திறப்புவிழாவில் பங்கேற்றதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) சர்வதேச அரங்குக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் அவர் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
இதுவரை அவர் ஜனாதிபதியாக பதவியேற்காத நிலையில், சாதாரண அமெரிக்க குடிமகனாக இருக்கும் நிலையில் அனைத்துலக நெருக்கடிகளைச் சமாளிக்க தற்போதிருந்தே தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Welcome @realDonaldTrump.
— Emmanuel Macron (@EmmanuelMacron) December 7, 2024
Proud of the friendship between the United States and France. There are so many challenges for us to face together. pic.twitter.com/5EpFvDVjaL
வில்லியமுடன் சந்திப்பு
அந்த வகையில், குறித்த விஜயத்தின் முக்கிய அங்கமாக பிரித்தானிய இளவரசர் வில்லியமுடனும் சந்திப்பு ஒன்று இடம்பெறவள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பாவிற்கும் - டிரம்பிற்கும் இடையிலான நிலைப்பாடு சில சிக்கல்களை தோற்றுவித்துள்ளதன் விளைவாக, இரு தரப்புக்கும் சாதகமான எதிர்கால போக்கை ஏற்படுத்த இம்மானுவேல் மக்ரோன் குறித்த நிகழ்வு மூலம் வாய்ப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ரஷ்யப் படையெடுப்பை முறியடிக்கும் முக்கியமான கட்டத்தில் உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வரும் இராணுவ உதவிகளை ட்ரம்ப் மீட்டுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதால் ஐரோப்பியத் தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நேட்டோ கூட்டணி
இந்நிலையில், மக்ரோன், நேட்டோ கூட்டணிக்கும் உக்ரேனுக்கும் வலுவான ஆதரவாளராக காணப்படுகின்றார்.
இதன் காரணமாக ஜரோப்பாவின் பாதுகாப்பு தொடர்பில் ட்ரம்ப்புடன், மக்ரோன் விசேடமாக கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |