ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை : இந்தியா கையாளும் இராஜதந்திரம்
ரஷ்யாவிற்கும் - உக்ரைனுக்கும் இடையிலான போரின் தொடர்ச்சியை விட தற்போது பேச்சுவார்த்தைகளின் யதார்த்தத்தை நோக்கிய இராஜதந்திர நகரவுகள் இடம்பெற்று வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கட்டார் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது பின் அப்துல்ரஹ்மானின் அழைப்பின் பேரில் அவர் தோஹா மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
உக்ரைன் - ரஷ்யா
“உக்ரைனுக்கு சென்று, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன், வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பேசுவது, அதேபோல் ரஷ்யாவுக்கு ஜெலென்ஸ்கி விஜயம் மேற்கொள்வது போன்ற விடயங்களே இருதரப்பு மோதல்களை கட்டுபடுத்துவதற்கான சிறந்த வழியாகும்.
வெளிப்படையாக செய்திகளை எடுத்துச் செல்வது சிறந்த நற்புறவை இரு நாடுகளுக்கும் ஏற்படுத்தும்.
இவ்வாறான பொது விடயங்களை கண்டுபிடிக்கவும், அதற்கான வழிகளை உறுவாக்கவும் இந்தியா முயற்சிக்கின்றது.
போரின் தாக்கம்
இந்தப் போரினால் தாக்கம் செலுத்திய எரிபொருள் விலை, உணவு விலை, பணவீக்கம், உரச் செலவுகள் போன்றன 125 நாடுகளை பாதித்துள்ளது.
மேலும், ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த நலன்கள் உள்ளன. அவர்கள் சிலவற்றிற்கு சர்வதேசத்துடன் உடன்படுகிறார்கள், சிலவற்றில் இருந்து விலகிக் கொள்கின்றனர்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
