பிரான்ஸிற்கு புதிய பிரதமர்: மக்ரோன் வழங்கியுள்ள உறுதிமொழி
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் தோல்வியைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் மைக்கேல்(michel-barnier) பார்னியர் பதவி விலகியுள்ளார்.
இதனை அடுத்து வரும் நாட்களில் புதிய பிரதமரை நியமிக்க உள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று பிரான்ஸ் மக்களுக்கு ஆற்றிய 10 நிமிட உரையிலேயே அவர் இதை தெரிவித்துள்ளார்.
மக்ரோன் உறுதி
இந்நிலையில், 2027 ஆம் ஆண்டு வரை தனது பதவியில் இருப்பேன் என்று மக்ரோன் உறுதிப்படுத்தியுள்ளார்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக பிரான்ஸ் அரசாங்கத்திற்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முதல் முறையாக இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த வாக்கெடுப்பானது, முன்னோடி இல்லாத நடவடிக்கை என மக்ரோன் விளக்கமளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
