ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் மேற்குலகுக்கு ரஷ்யா சொன்ன செய்தி
உக்ரைனுக்கு எதிரான போரில் ஹைப்பர்சோனிக்(Hypersonic)ஏவுகணை பயன்படுத்தப்பட்டமையானது தோல்வியைத் தடுக்க தமது நாடு எந்த வழியையும் உருவாக்கும் என்பதை மேற்குலக நாடுகளுக்கு புரிய வைப்பதற்காகவே என ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க பத்திரிக்கைதளம் ஒன்றுக்கு வழங்கிய செய்தியில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
எதிரான நிலைப்பாடு
“மேற்குலக நாடுகள், எந்த நாட்டிலும், எந்த பிராந்தியத்திலும், எந்த கண்டத்திலும் தங்கள் மேலாதிக்கத்தை வைத்திருப்பதற்காக போராடுகின்றன.
மேலும், ரஷ்யா மேற்குலகுக்கு எதிரான நிலைப்பாட்டை அதிகரிக்க விரும்பவில்லை.
அமெரிக்கா மற்றும் அதன் பங்காளிகளுடன் ஏற்படும் தவரான புரிதல்களை தமது நாடு தவிர்க்க விரும்புகிறது.
பிராந்திய ஒருமைப்பாடு
அத்தோடு உக்ரைன் தனது பிராந்திய ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டது.
இந்தப் போரை நாங்கள் தானாக தொடங்கவில்லை. நேட்டோவை எங்கள் எல்லைகளுக்கு நெருக்கமாக வருவது தொடர்பில் உள்ள சிக்கல்களை உருவாக்கும் என பல ஆண்டுகளாக எச்சரித்தோம்.
அதிலிருந்து தற்காத்து கொள்ள நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |