திடீரென எதிர்க்கட்சி உறுப்பினர்களை வரவழைத்து ரணில் கூறியவை!
ஜனநாயகத்தின் ஓர் அங்கமான பல கட்சி ஆட்சி ஜனநாயக முறையை பாதுகாப்பதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் குறித்த கருத்தில் எமக்கிடையே ஒற்றுமை இருக்கிறது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் திடீரென நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இதனை குறிப்பிட்டுளளார்.
இந்த கூட்டத்தில் பல கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். தொடர்ந்துரையாற்றிய ரணில் விக்ரமசிங்க,
விடுதலைப் புலிகள் - தமிழ்ச்செல்வன் விவகாரத்தில் உயிரை பணயம் வைத்த சுரேஸ் சாலே! அலி சப்ரி விடுக்கும் எச்சரிக்கை
எதிர்க்கட்சி செயற்பாடுகளை முடக்கும் முயற்சி
இன்று பல கட்சி ஆட்சி ஜனநாயக முறைமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.இந்த அச்சுறுத்தல்களுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டும்.நாட்டில் உள்ள சட்டத்தரணிகளை பயமுறுத்துதல் மற்றும் சமூக ஊடகங்களில் பௌத்த பிக்குகளுக்கு எதிராக விசமப்பிரசாரங்கள் நடைபெறுகின்றன.

இவற்றுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.மக்களின் அபிலாஷைகளை பாதுகாக்க வேண்டும்.எங்கள் ஒவ்வொருவருக்கும் பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கு தாக்கல் செய்து எங்கள் கட்சி செயற்பாடுகளை நிறுத்துவதற்கு முயற்சிக்கின்றனர்.
மேற் குறிப்பிட்ட காரணங்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எங்கள் கட்சியின் ஆதரவு எப்பபோதும் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
நாயகனாக அறிமுகமாகும் வித்யாசாகர் மகன் ஹர்ஷவர்தன்.. அவரது ' மாயம் நீயடி' மியூசிக் வீடியோ ஆல்பம் Cineulagam
பிரகாஷ்ராஜ் இல்லை.. கில்லி முத்துப்பாண்டி ரோலில் நான் தான் நடிச்சிருக்கணும்: பிரபல நடிகர் பேட்டி Cineulagam