குழந்தையால் ரத்து செய்யப்பட்ட விமானப் பயணம் - நிர்வாகம் எடுத்த திடீர் முடிவு
கனடா - டொராண்டோவிற்குச் செல்லும் விமானம் ஒன்று, ஒரு சிறு குழந்தை தனது சீட் பெல்ட்டை அணிய மறுத்ததால், ரத்து செய்யப்பட்டுள்ளதாக போர்ட்டர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள விக்டோரியா சர்வதேச விமான நிலையத்திலிருந்து டொராண்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் PD444 விமானம், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் புறப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு குழந்தையால் ரத்து செய்யப்பட்ட விமானம்
இது தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது,
விமானம் முனையத்திலிருந்து புறப்பட்டு ஓடுபாதையை நோக்கிச் சென்றது, ஆனால் உடன் வந்த பெற்றோர் மற்றும் விமானப் பணியாளர்கள் முயன்றும், இருக்கையில் நின்றுகொண்டிருந்த ஒரு சிறு குழந்தை தனது சீட் பெல்ட்டை அணியவில்லை.

இந்த பாதுகாப்பற்ற சூழ்நிலையால் விமானத்தால் புறப்பட முடியவில்லை, எனவே விமானப் பணியாளர்கள் முனையத்திற்கே திரும்பிச் சென்று பயணிகளை இறக்கிவிட முடிவு செய்தனர்.
விமானத்தை மீண்டும் தயார் செய்வதற்கும், குழந்தையையும் பெற்றோர்களையும் விமானத்திலிருந்து இறக்குவதற்கும், அவர்களின் உடமைகளை மீட்டெடுப்பதற்கும், ஆவணங்களை மீண்டும் தாக்கல் செய்வதற்கும் தேவைப்பட்ட நேரத்தால், விமானம் மிகவும் தாமதமாக புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக விக்டோரியா விமான நிலையத்தின் ஓடுபாதை நள்ளிரவு 12:30 மணிக்கு மூடப்பட்டுள்ளது. ஒரு குழந்தையால் மற்ற பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக நாங்கள் வருந்துகிறோம். அவர்கள் மறுநாள் விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO..
பெங்களூரு நட்சத்திர ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்ட 2 சிறுமிகள்: தந்தை எடுத்த விபரீத முடிவு News Lankasri