சிறைக்குள் கெஹெல்பத்தர பத்மேவின் உயிருக்கு அச்சுறுத்தல்..! சயனைட் கொடுத்து கொலை செய்ய முயற்சி..
பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவரான கெஹெல்பத்தர பத்மே, தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிமன்ற விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதரகமவிடம் நேற்றையதினம்(28.09.2026) அவர் இதனைக் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெலிசர சிறைச்சாலையில் இருந்து காணொளி தொழிநுட்பம் மூலம் நீதிமன்ற விசாரணைகளுக்காக கெஹெல்பத்தர பத்மே முன்னிலைப்படுத்தப்பட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு இல்லை
வெலிசர சிறைச்சாலைக்குள் தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திற்குள் இருக்கும் ஏனைய கைதிகள் சிலர் சயனைட் மருந்தினை கொண்டு வந்து வைத்ததாகவும், இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
''வெலிசர சிறைச்சாலை உயர் பாதுகாப்புச் சிறைச்சாலை என்று கூறப்படுகின்றது. எனினும், இங்கு பாதுகாப்பு இல்லை. எனது சிறைக்கூடத்திற்குள் சயனைட் கொண்டு வந்து வைத்துள்ளனர்'' என கெஹெல்பத்தர பத்மே நீதவானிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்த வெலிசர சிறைச்சாலையில் எனக்கு மட்டுமல்ல, சிறைச்சாலை அதிகாரிகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லை. எனவே, நீதிபதி அவர்களே, இந்த விடயத்தில் தலையிட்டு என்னை வேறு ஒரு சிறைச்சாலைக்கு மாற்ற முடியுமெனின், உடனடியாக என்னை மாற்றவும்.
எனக்கு இரண்டு முறை சயனைட் கொடுத்து கொல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை” எனவும் கெஹெல்பத்தர பத்மே குறிப்பிட்டுள்ளார்.
50 ஆயிரம் ரூபா ஓய்வூதியம் பெறுபவரின் பரிதாப நிலை! யாசகம் பெறுபவரை தேடி வந்த சகோதரியின் மோசடித் திட்டம்
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan