அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழ் அரசியல்வாதிகள்! (Video)
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று அடையாள உண்ணாவிரத போரட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் பேசும் மக்கள் மீது கூடுதலாக திணிக்கப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
உண்ணாவிரத கைதிகளுக்கு ஆதரவு
பயங்கரவாத தடைச் சட்டத்தினை எதிர்த்து நாடு தழுவிய ரீதியிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்திலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து சிறையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து குறித்த அடையாள உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்திற்கு சாணாக்கியனின் ஆதரவு
குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியேந்திரன், முன்னாள் அரசாங்க அதிபர் உதயகுமார் மற்றும் அரசியல்வாதிகள் வணபிதாக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் இணைந்து கொண்டுள்ளனர்.



1000 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் பிரச்சினையில்.. - டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு News Lankasri

ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம்: பிரதமரிடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள் News Lankasri
